ஆறுகளைத் தேடி -4 தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பேரதிசயங்களை கொண்டது கன்னியாகுமரிமாவட்டம்! கொட்டித் தீர்க்கும்! குதூகலித்து ஓடும்! கண்களை விரிய வைக்கும்! இதயங்களை அள்ளும்! மனதை வருடும், மயக்கம் கொள்ள வைக்கும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..! இங்கே ஒரு சிறிய அறிமுகம்; குமரி மாவட்டத்தில் ஓடும் தாமிரபாணி ஆற்றை நலம் விசாரிக்க எண்ணி நீங்கள் ஒரு மடல் எழுதினால், அதன் முகவரியில், கோதையாறும் பறளியாறும் தோன்றும் வனப்பகுதியும் இடம் பெற்றாக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு திசையில் பாய்ந்தோடி ...

ஆறுகளைத் தேடி – 3 கோதையாறு, பறளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பழையாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமாக 20க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கிறது கன்னியாகுமரியில்! பல்லாயிரமாண்டுகளாக நாஞ்சில் நாடான குமரி மாவட்டத்தை வளமுடன் வைத்திருக்கும் ஆறுகள் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்; இந்த பயணத்தை தெற்கில் இருந்து துவங்கலாம். குமரியை தமிழ்நாட்டின் தென் எல்லையாக தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகிறது. ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு” கன்னியாகுமரியின் மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், தெற்கில் இந்திய பெருங்கடலும், கிழக்கில் வங்க கடலும் வடக்கில் திருநெல்வேலியும் ...