இது ஒரு ‘தேசிய இனத் திரைப்படம்’ ஆகும். தமிழ் வாழ்க்கையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது. கொங்கு மண்ணின் நிலக் காட்சிகள் அருமையாகத் திரைக்கு வந்திருக்கின்றன. பேன் இந்தியா ஃபாசிசமும், கதாநாயக ஆராதனையும், இயக்குனர்களைப் பிடித்தாட்டுகிற காலச் சூழலில், அதற்கு மாற்றாக இதயம் மகிழும் இனிய அனுபவம்! வறுத்தெடுக்கும் இந்த வெய்ய்ய்ய்யில் காலத்தில் ஒரு மழை  – அது தூறல் அல்ல ; பெரு மழை  – பொழிந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்? குரங்குப் பெடல் பார்த்தவர் போல் ஆவீர்கள்! எளிமை, அழகு, நுட்பம், நகைச்சுவை, ...