சீக்கிய சமூகத்தின் வழிகாட்டியான குரு நானக் அவர்களின் பெயரால் சென்னை வேளச்சேரியில் நடத்தப்படும் குருநானக் கல்லூரி நிர்வாகி மஞ்சித் சிங் நையரும், உயர்கல்வித் துறை அதிகாரி ராவணனும் கூட்டு சேர்ந்து பேராசியர்களிடமும், ஏழை மாணவர்களிடமும் நடத்தும் வசூல் வேட்டைக்கு ஒரு அளவில்லையா…? ஏழை, எளிய குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்வதற்காக சீக்கிய மதத்தினரால் சென்னையில் குரு நானக் கல்லூரி உருவாக்கப்பட்டது.  குருநானக் அவர்களின் உயர்ந்த லட்சியங்களை பின்பற்றி, சீக்கிய பெரியோர்களால் உருவாக்கப்பட்ட குருநானக் கல்லூரி தற்பொழுது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த ...