பழுதடையும் செட் ஆப் பாக்ஸ்கள்! வெறுப்பான மக்கள்! விலகிச் செல்லும் ஆப்பரேட்டர்கள்!முறைகேடான நிர்வாகம்! அரசு கஜானாவிற்கு வரவேண்டிய 4,440 கோடிகள் எங்கே போனது? அரசுக்கோ நஷ்டம்! ஆபரேட்டர்களுக்கோ கஷ்டம்! ஊழலில் திளைப்பவர்களுக்கோ அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வெறும் 500 கனெக்ஷன் வைத்துள்ள சின்னஞ் சிறிய ஆபரேட்டர்கள் கூட தன் குடும்பத்தை நடத்தக் கூடிய ஒரு கெளரவமான ஊதியத்துடன் வாழ முடிகிறது! ஆனால் 36 லட்சம் கனெக்ஷன்களை வைத்திருந்த அரசு கேபிள் படிப்படியாக 15 லட்சம் கனெக்ஷன்களை இழந்து நிற்கிறது. கட்டமைப்பும் குலைந்து வருகிறது! 25,000 ஆபரேட்டர்களைக் ...