பாஜக அரசால் மாற்றப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் எளிய மக்களை, ஒடுக்கப்பட்டவர்களை கடுமையாக பாதிக்கும். இந்திய அரசியல் சட்டம் உத்திரவாதப்படுத்திய சமூக சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் இரண்டையும் இது பறிக்கும். காவல்துறையின் அத்துமீறல்களுக்கு வலு சேர்க்கும்; நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம், 1860, இந்திய சாட்சியச் சட்டம், 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் ...