தமிழகத்தை உலுக்கிய கொலைச் சம்பவம் இது. குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போனதும் மர்மம். கொல்லப்பட்டதும் மர்மம். திறமைசாலிகளான நம் தமிழக போலீசாருக்கு தரப்பட்ட அரசியல் அழுத்தங்களால் திசை மாறிய வழக்கு! ஒரு பெண்ணின் கொலைக்கு பெண் தலைமையிலான ஆட்சியில் கிடைத்த அநீதி; கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் குளித்தலையை அடுத்துள்ள  பணிக்கம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.  2004-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற மீனாட்சி, மாலையில் வீடு திரும்பவில்லை. ...