தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற பிரபல இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்து தமிழக மெடிக்கல் ஷாப்களிலும் பரவலாக விற்கப்பட்டவையே. தமிழ் நாட்டில் தரக்குறைவாக மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்கி பெருகியுள்ளதற்கு காரணம் என்ன? குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெட்ரோலில்  இருந்து கிடைக்கும் ரசாயனமாகும். இது தொழிற்சாலை உபயோகத்திற்கும், பெயிண்ட் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதாகும். இதை இருமல் மருந்தில் ...