இந்தக் காலத்திலும் மருத்துவமனையைத் தவிர்த்த குழந்தை பேறு சாத்தியமா? இதோ, இதற்கு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. எந்த மருந்து, மாத்திரை, டாக்டர், மருத்துவக் கருவிகள் உதவியுமின்றி சுகமான பிரசவத்தை வீட்டில் நிகழ்த்திய 40க்கு மேற்பட்ட  தம்பதியினரின் அனுபவங்கள் வியப்பூட்டுகின்றன; சீர்காழியில் உள்ள பசுமை அரங்கத்தில் (LAWN PARK) 25.08.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டில் குழந்தை பெற்றவர்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை போன்ற ...