சுதந்திர இந்தியாவில் இது வரையிலான போராட்டங்களிலேயே பெருந்திரள் மக்களின் கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிரான அமைதிவழி அகிம்சை போராட்டம் அதி முக்கியமானது. இதை வன்முறை பாதைக்கு மாற்றும் சூழ்ச்சிகளை அதிகார மையங்கள் முன்னெடுத்ததும், அது முறியடிக்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்; கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் அதிபர் கொர்பசேவ்விற்கும் இடையில் கையெழுத்தாகியது. அப்போதில் இருந்து இந்த அணு உலைக்கு கடும் எதிர்ப்பை மக்கள் காட்டி வந்தனர். அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல் ...













