ராய்டர் நிறுவன தகவல்படி 40 பேர் சாவு. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமாம். காணாமல் போனவர்கள்  எண்ணிக்கை தெரியவில்லையாம். ஒரே நேரத்தில் எட்டு கோடி பேர்களை குவியவிட்டால் எப்படி சமாளிக்க முடியும்..? எப்படி  நடந்தது? எங்கே பிழை ஏற்பட்டது? உலகின் மிகப் பெரிய ஆன்மீக பெருவிழாவான மகா கும்பமேளா சுமார் 40 கீமீ பரப்பளவில் நடைபெறுகிறது. அதிலும், அந்த திருவேணி சங்கமம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை  சங்கமிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குளித்து விட ...