கேரளத்தின் உள்ளாட்சி தேர்தல்களில் ஆளுகின்ற இடதுசாரி அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதற்கான காரணங்கள் என்ன? பாஜக அங்கே மெல்ல பலம் பெற்று மூன்றாம் அரசியல் சக்தியாக வளரும் அபாயம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றிகளை குவித்துள்ளதை குறித்த அலசல்; கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் மாநாகராட்சில் மொத்தமுள்ள 101 இடங்களில் , 50 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதானது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. 1980 முதல் திருவனந்தபுரத்தை தங்கள் கைகளில் வைத்திருந்த இடதுசாரிகள் இப்பொழுது அதை இழந்திருக்கிறார்கள் ...











