மக்களோடு மிக நெருக்கமான தொடர்புடையது உள்ளாட்சித் துறை. சமூகத்தின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவு நீரகற்றல், தூய்மை பணிகளில் அவுட்சோர்சிங், உட்புறச் சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல்.. போன்ற பலவற்றில் தற்போது இந்த ஆட்சியில் நடந்துள்ள பகாசூர ஊழல்கள் பகீர் ரகமாகும்; அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது எந்த மாதிரி வரைமுறையற்ற ஊழல்களில் ஈடுபட்டு தற்போது தண்டிக்கப்படாமல் வழக்குகளை சமாளித்து வருகிறாரோ, அதே பாணியில் தானும் ஊழல் செய்து, அவரை விட அதிக பணம் பார்த்து விடுவது என்பதில் ...