தேர்தல் ஆணையர் சுதந்திரமாக செயல்பட முடியாதா? ஏன் இத்தனை சிக்கல்கள்! தேர்தல் ஆணையரை கைப்பாவையாக்கும் பாஜக அரசுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட முன் வந்துள்ளது! இதில் வெகுண்ட சொலிசிடர் ஜெனரல், நீதிபதிகளையே மிரட்டுகிறார். வெற்றி பெறப் போவது நீதிமன்றமா? பாஜக அரசின் அதிகாரமா..? ஒரு வாரமாக தேர்தல் ஆணையம் அதன் ஆணையர்கள் அவர்களது நியமனம் மற்றும் செயல்பாடு பற்றி ஊடகங்கள் பரவலாக பேசி வருகின்றன. இதற்கு காரணம் நடந் து முடிந்த இமாச்சல் மாநில தேர்தலோ அல்லது நடக்கவிருகின்ற குஜராத் தேர்தலோ அல்ல. மாறாக தேர்தல் ...