ஜீவபாரதியின் ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தகத்தில் வாழ்ந்து மறைந்த ( நல்லகண்ணு மட்டும் விதி விலக்கு ) நூறு தியாகிகளைப் பற்றிய வாழ்க்கை பதிவைக் கண்டேன். அவர்கள் செய்த தியாகங்களும், சாதனைகளும் பதிவாகி உள்ளதைப் போல, நிகழ்காலத்தில் உள்ள ஒருவரை ஏன் எழுதக் கூடாது? எனத் தோன்றியதன் விளைவே இந்தக் கட்டுரை; இரண்டு பாகங்களில், நூறு கம்யூனிஸ்டுகளைப் பற்றி கே. ஜீவபாரதி தொகுத்துள்ளார். பத்து பாகங்கள் வரை இந்த தொகுப்பு வரும் என இரா.முத்தரசன் கூறினார். இந்தப் புத்தகத்தை தொடர்ந்து எழுதினால் யாரைப் பற்றி எழுதலாம் என ...













