இரண்டாண்டு விசாரணைகள், நூற்றுக்கணக்கான ரெய்டுகள்! இது வரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நேர்மையான ஆம் ஆத்மியின் இமேஜை சிதைக்க, பாஜக அரசு செய்யும் மூர்க்கத்தனமே கைது! ‘அதிகார’ பாஜகவுக்கு ஏற்பட்ட அச்சமே, அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகும்! இதோ வழக்கின் முழு விவரங்கள்; ”இது தேர்தல் நேரத்தில் நடந்துள்ள மாபெரும் ஜனநாயக படுகொலை” என சர்வதேச ஊடகங்களும், தலைவர்களும் கண்டிக்கின்றனர். ஊழலின் ஊற்றுக் கண்ணாய் திகழும் பாஜகவானது, ஆம் ஆத்மியிடம் மட்டும் அடங்கா ஆத்திரம் கொள்வது ஏன்? ‘காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்துள்ள நிலையில் டெல்லியின் ஏழு ...
அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம் ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர். ”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். ”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ...
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் ஒரு கொடுமை என்றால், அதற்கு பிறகு நடந்த கலவரத்தை காரணமாக்கி காவல்துறை போடும் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. கலவரத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பட்டதாரி இளைஞர்கள் முதல் பாமரக் கூலிகள் வரை சுற்றி வளைத்து தலித்துகள் கைது! இதன் பின்னணி என்ன? கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ஆங்கில இந்து பத்திரிகையில் அந்த பள்ளிக் கூடத்தை அதிகம் தாக்கியது ஆதி திராவிடர்கள் எனவும், ஆகவே, இது கவுண்டர் – தலித் சாதி மோதலாக வடிவம் கொள்ளும் என்றும் உளவுத் துறை ...
குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா? உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள் கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் ...
‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…? மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்! ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என ...