எதையெல்லாம் சாதாரண மக்கள் செய்யக் கூடாது என சட்டம் சொல்கிறதோ, அதை ஒரு அரசே அடாவடியாக செய்வது தான் எளிய மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை நிறுவி, அதை கொடும் எரியூராக மாற்றத் திட்டமிடும் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கின்றனர். வடசென்னை எரி உலை பெருநகர வாழ்க்கை என்பது பேரவல வாழ்க்கையே! ஒரே இடத்தில் மக்கள் குவியும் போது அவர்களால் உருவாகும் மலை போன்ற குப்பைகளுக்கு நேர்மையான முறையில் தீர்வு காண முன் கூட்டியே திட்டமிட்டிருக்க ...