தமிழக கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக காட்டும் அற்புதக் கலைப் படைப்பு.  தமிழ் மண்ணுக்கே உரித்தான சாதி ஆதிக்கம், பெண் அடிமைத்தனம், பேய் ஓட்டுவது போன்ற மூட நம்பிக்கைகள், மாப்பிள்ளை குடும்பத்தாரின் அதிகாரங்கள், அடங்க மறுக்கும் ஒரு பெண்.. எனக் காட்சி வழியில் ஒரு கவித்துவ சினிமா; அறம் ஆன்லைனில் அவ்வப்போது சினிமா விமர்சனமோ அல்லது அறிமுகமோ எழுதும் போது ஆசிரியர் சாவித்திரி கண்ணன், “எப்போதுமே வேறு மொழிப் படங்கள் குறித்தே எழுதுகிறீர்களே? தமிழில் வரும் படங்கள் குறித்து எழுதலாமே” என்று கேட்பார். அதற்கு ...