இத்தனை நாட்களாகியும் ஒரு மாபெரும் அநீதிக்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய் திறக்காமல் காட்டும் மெளனம், நுபூர் சர்மா கைது செய்யப்படாமல் இருப்பது, அதனால் நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள், வன்முறைகள்..அதை சாக்காக வைத்து இஸ்லாமியர்களை அடக்கத் துடிப்பது…! இஸ்லாமியர்களை அவதூறு செய்வதே வேலையாகக் கொண்டிருந்த நுபூர் சர்மாவிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தது மட்டுமின்றி, அவர் அவ்வாறு பேசும் போதெல்லாம் ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர்கள் தான் மோடியும், அமித்ஷாவும்! அதனால் தான் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக கட்சியில் இருந்து  ...