தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதாவின் கொடும் விளைவாக திருவண்ணாமலை மேல்மா, காஞ்சி பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நெல் வயல்கள் அபகரிப்பு…. எனத் தொடர்ந்து, தற்போது திருவாரூர் மாவட்டமே திகுதிகுக்கும் காரியத்தை திமுக அரசு செய்கிறது; திருத்துறைப்பூண்டி அருகில் கொருக்கை கிராமத்தில் 495 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசின் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் பண்ணையும், அதற்கான மேய்ச்சல் நிலமும் அமைந்துள்ளது.  1960 களின் இறுதியில் இப்பண்ணையை உருவாக்க அப்பகுதியில் வாழ்ந்த தகைசால் பெரியோர்கள் தானமாக வழங்கியதே இந்த நிலமாகும். இங்கு தற்போது ...