ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்துள்ள காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த வாரிசுக்கான நியமணத்தில் உருவான தடைகளை, போட்டிகளை  களைந்து, ஒருவழியாக தான் விரும்பியபடியே தன் தெலுங்கு  வம்சத்தில் இருந்து ஒரு வாரிசை மடத்தின் அடுத்த பீடாதிபதியாக்கிய விஜயேந்திரரின் காய் நகர்த்தல்கள் சுவாராசியமானதாகும்; பார்ப்பதற்கு எளிமையாக ஒரு சன்யாசி போல காட்சியளிக்கும் சங்கராச்சாரியார்களும், அந்த மடமும் உண்மையில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். கோடிக் கணக்கில் பணம் புழங்கும்  பெரிய கல்லூரிகள், காஸ்டிலியான பள்ளிக் கூடங்கள், அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஏராளமான விடுதிகள், ரியல் எஸ்டேட் ...