அங்கிங்கெனாதபடி தெரு ஓரங்களிலும், வேலியிலும் பூக்கின்ற பூ தான் சங்குப் பூ. விலை மதிப்பில்லா இதன் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாது. சர்க்கரை நோய் தொடங்கி புற்று நோய் வரை சகல நோய்களில் இருந்தும் காக்கவல்லதே இந்த சங்குப் பூ. இயற்கை தந்த வரமான இந்தப் பூவின் மருத்துவ குணங்களை பார்ப்போம்; சங்கு போன்ற அமைப்பில் பூ  இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும்  இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. காக்கரட்டான் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் ...