வீட்டுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணிடம் பழகி நம்பிக்கை தந்து, அனுபவித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணை தனக்கு தெரியவே தெரியாது எனச் சொல்லும் மைனர்கள் பலரை பார்க்கிறோம். சங்க காலத்தில் இப்படி பெண்ணை ஏமாற்றும் ஆணுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பதை சங்க இலக்கியமான அக நானூறு சொல்கிறது! அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றில் நிகழ்வுகளை மாற்றிப் பேசி, கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்தததாகவும், நிகழ்காலம் தான் மிகவும் மோசமாகிவிட்டது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் உண்டு! இப்பேர்பட்ட புனைவுகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் விசயங்கள்  மதம், இனம், ...