புதிய ஆட்சியின் முதல் ஆளுநர் உரை என்ற சடங்கு பிரச்சினையின்றி நடந்து முடிந்தாலும், இனி வரும் நாட்களில் தவெக அரசு மீது திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகியவை கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான அறிகுறி தெரிகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின்  உச்சபட்ச ஆக்ரோஷத்துடன் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டார்; கடந்த நான்காண்டுகளாக போலன்றி, இன்று ஆளுநர் முரண்பட்டு முறுக்கி கொண்டு போகாமல், நடத்திக் கொடுத்தது என்பது ஒரு வகையில் பாசிடிவ் அம்சமே! தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது மகிழ்ச்சி அளித்தது. அதற்கு அடுத்தபடியாக தேசிய கீதத்தை ...