சந்திரசேகரராவ் பாஜகவையும் மோடி, அமித்ஷாவையும் கடுமையாக தாக்கி பேசுகிறார்! பாஜகவை எதிர்க்கும் அவரது அதிரடி பேச்சுக்களால் தொடர்ந்து அகில இந்திய கவனம் பெற்ற நிலையில், தன் கட்சியை தேசிய கட்சியாக்கிவிட்டார்! உண்மையிலேயே பாஜகவிற்கான மாற்று அரசியலை கே.சி.ஆர் தருவாரா? தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் எனச் சமீப காலம் வரை அறியப்பட்டு, தற்போது பாரத் ராஷ்டிரிய சமிதியின் தலைவராக உருமாறியுள்ள சந்திர சேகரராவ் தற்போது அகில இந்திய கட்சித் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்! காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர்! ...