தெலுங்கு தேசத்திற்கு அதிக எம்.எல்.ஏக்கள் இருந்த போதிலும், கூட்டணிக் கட்சியான பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், மூன்று அமைச்சர்களும் சந்திரபாபு நாயுடு தந்தது ஏன்? தன் கட்சிக்கும், மகனுக்கும் போட்டியாக பவன் கல்யாண்  வளர வாய்ப்புள்ளதை நாயுடு உணரவில்லையா..? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த கட்டுரை; ஆந்திர அரசியலில் மிக மூத்த அரசியல்வாதியும் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் அனுபவமும் கொண்டவர் சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். என்.டி.ஆர் முதல்வரான பிறகே தெலுங்கு தேசத்தில் நாயுடு சேர்ந்தார். ...