சட்டங்களின் பெயர்களெல்லாம் சமஸ்கிருதமாக்கப்பட்டுள்ளன. திட்டங்களின் பெயர்களும் சமஸ்கிருதத்திலேயே வைக்கப்படுகின்றன. மனுநீதிக்கு மறுபடியும் புத்துயிர் தர நினைக்கிறது பாஜக அரசு. எனவே, எல்லாவற்றையும் சனாதனக் கண்ணாடி வழியே பார்க்க மக்களை பயிற்றுவிக்கிறது.இது குறித்த ஒரு அலசல்; சனாதனத்தை விமர்சிப்போர் அது குறித்த சில அடிப்படைகளை அறியவே இங்கு தொகுத்து தந்துள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த செ.தினகர ஞானகுருசாமி ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அறியப்படாத இந்து மதம், சனாதனம் அறிவோம், (சனாதான லீக்ஸ்) உள்ளிட்ட நூல்களை எழுதிய இவர் மாறுபட்ட கோணத்தில் வேதங்கள், புராணங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் பாட்டாளி ...













