‘ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான்’ என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத் துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை; எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்! அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் ...