இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், சபரிமலை சன்னதியில் இறைவனை வழிபடும் உரிமை பெண்களுக்கு இன்னும் சவாலாகவே உள்ளது, ஏன்? நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்; ‘சபரிமலை கோயிலில் 10  முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை’ என்ற சம்பிரதாயத்தை வலியுறுத்தி ,திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தேவஸ்தானம் போர்டு சுமார் ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கிறது. ‘அனைத்து பெண்களும் வயது வித்தியாசம் இன்றி சபரிமலை கோயிலில் ...