இது வரையிலான தமிழக சபாநாயகர்களிலேயே அடாவடியாக அதிகாரத்தை செலுத்தியதில் இன்றைய அப்பாவு அவர்களை மிஞ்ச ஆளில்லை…என்றே தோன்றுகிறது. செய்கிற அத்துமீறல்களை எல்லாம் செய்துவிட்டு நியாயவானைப் போல பாவனை காட்டுவதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை..! அடேங்கப்பா..! சட்டசபை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தவும், மக்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எதிரொலிக்க உறுப்பினர்களுக்கு உரிய வாய்ப்பை தருவதும் தான் சபாநாயகரின் கடமை. ஆனால், அப்பாவு அவர்கள் உறுப்பினர்கள் யாரையுமே முழுமையாக பேச அனுமதிப்பதில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே அதிரடியாகத் தலையிட்டு, ”இதைத் தானே சொல்ல வர்றீங்க. சரி, உட்காருங்க” அமைச்சர் ...