சபாநாயகரின் சமநிலையற்ற அணுகுமுறைகளால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகளை தடுப்பவராக, ஆட்சியாளர்களை விமர்சிப்போரை புல்டோசரைப் போல தகர்ப்பவராக ஆட்சியாளர்களுக்கு ஓம் பிர்லா செய்யும் ஒப்பற்ற சேவைகள் குறித்த ஒரு அலசல்; மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே! ஏனெனில் நரேந்திர மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகளை விட எண்ணிக்கையில் அதிக வலிமை கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு அரசியல் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வெளிப்படையான பாரபட்சமான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்ட பிர்லாவுக்கு இந்த வெற்றி ...
















