சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் ரொம்ப உருக்கமாகத் தான் பேசுகிறார்! ஒரே கூச்சல், குழப்பம்..! ஆபாச அர்சனைகள்..என்று கதிகலங்குகிறது சட்டமன்றம்…! ஆகவே, சட்டசபையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும் என மன்றாடுகிறார்..! ஆனால், சட்ட சபை சண்டை சபையாக மாறியதற்கு உண்மையில் சபாநாயகர் தான் பிரதான காரணமாகும். சபாநாயகர் பதவி என்பது வானாளவிய அதிகாரம் கொண்டது. ஆளுமைத் திறனுள்ள சபாநாயகர் என்பவர் ஒரு இராணுவத் தளபதிக்கு ஒப்பானவராகத் திகழ்ந்து, சபையை பேச்சால் மட்டுமல்ல, அமைதியாக இருங்கள் என சைகை காட்டினாலே எழுந்தவர்கள் அமர்ந்துவிடக் கூடிய ஆளுமையாக ...