கிராமப்புற உள்ளாட்சிகளில் கிராம சபை நடத்தி, மக்களின் பங்கேற்புடன் திட்டங்கள் செயல்படுத்துவது போல நகராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதிபடுத்த வார்டு சபை கூட்டங்களை நடத்த மறுப்பது ஏன்? உள்ளாட்சியை ஏன் வலுப்படுத்துவதில்லை?  Voice of People ஒருங்கிணைப்பாளர் சாரு கோவிந்தன் பேட்டி;  உள்ளாட்சிகள் மக்களின் பங்கேற்புடன் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக செயல்பட அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு கிராம சபை நடத்துவது போல, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பகுதி சபை, வார்டு சபை உள்ளன.  ஆனால், இவை சரி வர நடைபெறுவதில்லை. ...