இயற்கை வழி நல வாழ்வு; 3 அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது. மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா?  சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை சிகிச்சை அணுகுமுறை குறித்த ஒரு அலசல்; ஒரு குழந்தை தாயின் கருவறையில்இருந்து வெளி வருவதற்கான பிறப்புரிமை என்பது இயற்கையானது. மற்றும் சட்டப்படி பெறும் அடிப்படை உரிமையுமாகும். கருவறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழும் உரிமையை அது குறிக்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு மனிதருமே ...