‘சிதம்​பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்​தர்​கள் தேவாரம் பாடலாம். இதற்கு  அனுமதி​யளித்த அறநிலை​யத் துறையின் உத்​தரவு செல்லும்’ என்று சென்னை உயர்நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பு ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது! எத்தனை ஆண்டுப் போராட்டங்கள், அவமானங்களுக்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனால், இதை அமல்படுத்துவது பெரும் சவாலாகும்; நீதிமன்றத் தீர்ப்புகளை தீட்சிதர்கள் எந்தக் காலத்தில் மதித்துள்ளனர்? உடனே மேல் முறையீடு, நீதிமன்ற லாபி, வருஷக்கணக்கில் இழுத்தடிப்பு செய்வது, கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு தள்ளுபடியாவது இது தான் கடந்த கால வரலாறாகும். ...