அதிகார யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சித்தராமையா என்ற கிழட்டுச் சிங்கம், காங்கிரஸ் தலைமையின் செல்லப் பிள்ளையான சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தந்தாலும் தொடர்ந்து அமைதி காக்குமா? என்பதும், சர்ச்சைக்குரிய சிவகுமார் காங்கிரசின் நற்பெயரை காப்பாற்றுவாரா? இல்லை எல்லாம் கைமீறிப் போகுமா? என்பதும் விவாதமாகியுள்ளது; 2023-ல் காங்கிரஸ் வெற்றி பெற்ற உடனேயே சித்தராமையாவா? டி.கே.சிவகுமாரா? என்ற போட்டி வெளிப்பட்டது. ஒருவழியாக டி.கே.சிவகுமாரை சரிகட்டி, சித்தராமையாவை முதலமைச்சர் ஆக்கியது, காங்கிரஸ் மேலிடம். இதில் தலா இரண்டரை வருஷத்திற்கு இருவரும் பதவியை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் ...