ஐம்பது ஆண்டு கால பொது வாழ்க்கையில் எளிமையானவர்,நேர்மையானவர் என பெயர் பெற்றவர் சித்தராமையா. தற்போதோ அவமானத்திற்கு மேல் அவமானம்.  நீதிமன்றம் விசாரணைக்கு முகாந்திரம் உள்ளதாக சொல்லிவிட்டது. சித்தராமையாவை பாஜக எப்படி திட்டமிட்டு கவிழ்த்தது எனப் பார்ப்போம்; கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான நில ஊழல் வழக்கிற்கு கர்நாடாகா உயர் நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டன. சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு வேகம் பெற்றுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான ...