‘இஸ்லாமியராக இருப்பதே குற்றமாகிவிடுமா?’ என்று கேட்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன் செய்தி சேகரிக்க செல்லும் போது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு உள்ளார். பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் என்ன? புகழ்பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர்.கே.லட்சுமணன், எப்போதோ வரைந்த படங்கள், இப்போதும் பொருத்தமானவையாக பத்திரிகைகளிலும், இணையத்திலும் உலா வந்து கொண்டு  இருக்கின்றன. ஒருவரின் கழுத்தின் பின்புறம் கையை வைத்து, காவல்காரர் அழைத்துச் சென்று கொண்டிருப்பார். ‘நான் உண்மையைத்தானே சொன்னேன்’ என்பார் அவர்.  ‘அதனால்தான் உன்னை கைது செய்திருக்கிறேன்’ என்று பதில் ...