வீரச்செறிந்த போராட்டங்களை நடத்தி தஞ்சைத் தரணியில் பண்ணை அடிமை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்த சீனிவாசராவின் தியாகம் அளப்பரியது. சினீவாசராவின் திருவுருவம் இன்றும் பல வீடுகளில் வைத்து நன்றியுடன் நினைவு கூறப்படுகிறதென்றால், அவரது சாகஸ வாழ்க்கையை சற்று பார்ப்போமே; “குளிரும் சுடுதலும் உயிருக்கு இல்லை; சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை; எடுமினோ அறப் போரினை “ -பாரதி பிஎஸ்ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சினீவாசராவ் எனும் மாமனிதன் 54 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தலைமையில் ...