நகரமயமாக்கம் என்பது கிராமங்களை நரகமயமாக்கிக் கொண்டுள்ளது. தொழில் மயமாக்கம் என்பது விவசாயத்தை வேரோடு அழித்து, வட இந்திய இளைஞர்களுக்கு வரவேற்பு தந்து கொண்டுள்ளது. உருவாக்கப்படும் சிப்காட்களில் 80 % வட இந்தியர்கள் வேலை பெறுகின்றனர். இதில் எளிய மக்களிடையே ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு ஆட்சியாளர்களை எட்டுவதே இல்லை; ‘தொழில் மயமாக்கம்’, ‘நகரமயமாக்கம்’ என்பதை வளர்ச்சிக்கான அடையாளமாகவும், விவசாயத்தையும், கால் நடை வளர்ப்பையும், இயற்கை வளங்களையும் அதற்காக பலியிடலாம் என்றும் அதிகாரமட்டத்தில் ஒரு எண்ணப் போக்கு மிக ஆழமாக உள்ளது. இதன் விளைவாக எளிய கிராம ...


















