உள்நாட்டில் மறுக்கப்பட்ட தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்; இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது. தன்ராஜ் ...