சிறுநீரக மாற்று முறை கேட்டை 30 ஆண்டுகளாக செய்யும் இந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவே முடியவில்லை. இதற்கு அரசு நிர்வாக ஒத்துழைப்புகள் தொடர்ந்து கிடைப்பது எப்படி? ஆயிரக்கணக்கில் ஏழைகள் ஏமாந்து கொண்டே உள்ளனர். புரோக்கர்களை நெருக்க முடியவில்லை! அரசியல் செல்வாக்கால் அநீதிகள் தொடர்கின்றன; தமிழகத்தில் உழைத்து வாழும் நெசவாளிகளின் வாழ்க்கை நிலை படுமோசமாக உள்ளது. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டுள்ளது. அரை வயிற்று கஞ்சியுடன் வாழ்க்கை அல்லாடுகிறது. திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் கொடுமையில் ...











