ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, தலைமை செயலாளராக அறியப்பட்டவரான இறையன்பு, ஒரு தீவிர எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பட்டாளர் என்பது தான் அவரது தனித்துவம்! சமீபத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலைக்குள் தங்களுக்குள் மறைந்திருந்த 81 படைப்பாளிகளை அவர் கண்டெடுத்து அவர்களின் நூல்களை வெளிக் கொண்டு வந்துள்ளார்! இது எப்படி சாத்தியமாயிற்று? இறையன்பு எழுத்தை ஒரு தவமாக கொண்டவர். அதனால் தான் முழு நேர எழுத்தாளர்களை விடவும் 150 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதிக் குவித்துள்ளார். வாழ்க்கையை திட்டமிட்டு கடமைக்கு முக்கியத்துவம் தருவதில் அவரை இன்னொருவர் விஞ்ச முடியாது. அதிகாலை ...