வீரப்பனின் அண்ணன்,  மாதையன் 33 வருடங்களாக சிறையிலேயே இருந்து 74 வயதில் சமீபத்தில் இறந்து போனார்.இது போல முதுமையையும் நோய்களையும் சுமந்து கொண்டு மரணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடிவதில்லை? சிறைச் சாலைகளில் ஏன் மனித உரிமைகளுக்கு மரியாதை இல்லை? ”மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது”, என்று இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  வந்த போது, மாதையன் தன்னிடம் சொன்னதாக, நீண்டகால சிறைவாசியாக இருந்த ...