ஆழ்ந்த கொள்கை பற்றால் அகில இந்திய பொதுச்செயலாளரானவர், சீர்மிகு அறிவாற்றலாளர். மென்மையான, அதே வேளை ஆணித்தரமான வாதங்களின் மூலம் அறிவார்ந்த இந்தியர்களை கவர்ந்தவர்! இந்திய அரசியலின் முக்கியமான காலகட்டங்களில் வரலாற்றுத் தேவையாக உறுதியுடன் செயல்பட்டவர்; இந்த நாட்டின் பண்பையும், மக்களின் முன்னேற்றத்தையும் நெஞ்சில் ஏந்தியவர் தோழர். சீத்தாராம் யெச்சூரி. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளரான தோழர். சீத்தாராம் யெச்சூரி சில காலமாக நுரையீரல் தொற்று காரணமாக உடல் நலங்குன்றி சில தினங்களுக்கு முன் புது தில்லி AIIMS மருத்துவ மனையில் சிகிச்சைக்காக ...