சீமான் – ரஜினி சந்திப்பு என்பது இரு தனி நபர் சார்ந்த சந்திப்பு அல்ல. ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த பிம்மத்திற்குள் கரைய முயற்சிக்கும் சந்திப்பாகும். ரஜினியின் போயஸ் இல்லம் அரசியல் போக்கற்றவர்களின் போக்கிடமாக கடந்த பத்தண்டுகளாக எப்படி இயங்கி வருகிறது என்பது குறித்த ஒரு அலசல்; அதென்னவோ தெரியவில்லை. பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. திமுகவில் கலைஞர் சாப்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கி வளர்ந்து வந்த நிலையில் ...