சிசேரியன் அதிகரிக்கிறது. சுகப் பிரசவம் குறைகிறது.. இதற்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும் போது சிலர் குற்றவுணர்வால் குறுகிப் போக வேண்டியிருக்கும். பொதுவாக பெண்கள் சிசேரியனை விரும்புவதில்லை. அது அவள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்; “20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால்< கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளது. முன்பெல்லாம் பெண்கள்   பிரசவக்  காலங்களின்   போது  அதிக  வேலை  செய்வார்கள். குடம் தூக்குவது ...

வீட்டிலேயே சுகப் பிரசவம் நடப்பது என்பது நமது மரபில் பல்லாண்டுகளாக இருப்பது தான்! ஆனால், தற்போது வீடுகளில் சுகப் பிரசவம் நடப்பதை ஏதோ ஒரு குற்றச் செயல் போல சித்தரிக்கிறார்கள்! நவீன மருத்துவமனைகள் சிசேரியன் செய்வதை கட்டாயப்படுத்துகின்றன! சுயச் சார்போடு வாழ்வதற்கு சுதந்திரம் இல்லையா? சீர்காழியில் ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்தது. அதெப்படி வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்யலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் போலீஸ் பலத்தோடு வந்து பயங்கர பிரச்சினை செய்தது பெரிய செய்தியானது. ஆனால், தாயும்,சேயும் பரிபூரண ஆரோக்கியத்தில் இருப்பதை ...