சாலைகளில் சுங்கச் சாவடிகள் எதற்கு? கொள்ளை வரி வசூலிக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் சுங்கச் சாவடி என்பதான வழிப்பறிக் கொள்ளையை அனுமதிக்கிறார்கள்..? இதில் மக்கள் அனுபவிக்கும் இம்சைகள் கொஞ்சமா? நஞ்சமா? இதில் நடைபெறும் மோசடிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஒரு அலசல்; இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மொத்தமுள்ள 1041 சங்கச் சாவடிகளில் தமிழகத்தில் மட்டுமே 72 உள்ளன. தற்போது அதை அதிகரித்து 90 ஆக உயர்த்த போவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ...