சுதந்திரத்திலே பங்கெடுக்காத கட்சி இன்று இந்தியாவை ஆள்கிறது. விடுதலை வீரர்களை காட்டித் கொடுத்த இயக்கம் இன்று தேசபக்தி குறித்து மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது. சுதந்திர இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்தி, அடிமை இந்தியாவாக்க துடிப்பவர்களிடம் இருந்து நாடு தன்னை விடுவிக்க போராடுகிறது! நாடு அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து விடுதலை பெற்ற ஆண்டு 1947. சுதந்திரம் அடைந்து தற்போது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சி கட்டிலில் இன்று இருப்பவர்கள் இதை ‘ஆசாதி கா அமிர்த மகாத்சோவ்’ என்று கொண்டாட அழைப்பு விடுக்கின்றனர் . சுதந்திரத்திற்காக போராடிய வீர்ர்களின் ...