செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக புராண, இதிகாச கதாகாலாட்சேப பேச்சாளரான சுதா சேஷய்யனை நியமித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். சுதாவின் பின்புலமோ அதிர்ச்சியளிக்கிறது. இது செம்மொழி ஆய்வில் உண்மையான ஆய்வுகளை புறந்தள்ளி, எத்தகைய ஆபத்துகளை உருவாக்கவுள்ளது என்பது குறித்த அலசல்;’ மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழின் தொன்மை, அதன் இலக்கண, இலக்கிய செழுமை குறித்த ஆய்வுக்கானது. இதில் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகு ஆழ்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சதா சர்வ ...