சுதந்திர வேள்விக்கு தன்னையே பலியிட்டுக் கொண்டவர் சுப்பிரமணிய சிவா! சிறை வாழ்கையால் தொழு நோய்க்காளான போதிலும், நாடெங்கும் அலைந்து விடுதலை வேட்கையை விதைத்தார். அவரது இளம் மனைவி வறுமையில் வாடி பெற்ற துன்பங்கள் சொல்லி மாளாது. இன்று அவரது நினைவு நூற்றாண்டு; அவரது தியாக வாழ்வை நினைவு கூறுவோம்; இரக்தாக்சி வருடம் தை மாதம் இரண்டாம் தேதி இரவு பதினோரு மணி. கண்ணீர் தாரை தாரையாக  கண்களில் வழிகிறது. சிறை வாழ்வு தந்த சீதனமான தொழுநோயின் வாதையால் வலி தாங்க முடியாமல்  பித்து பிடித்தவர் ...